தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நம்பிக்கையை விடாதீர்கள்... நாளை நமதே!' - டிஎன்பிஎஸ்சி மோசடி குறித்து கமல் ட்வீட் - கமல் ட்வீட்

சென்னை: ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் பரவியிருப்பதை டிஎன்பிஎஸ்சி மோசடி பறைசாற்றுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

Kamal Tweet
Kamal Tweet

By

Published : Jan 30, 2020, 1:26 PM IST

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணைகள் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் பரவியிருப்பதை இந்த 'தேர்வாணைய மோசடி' பறைசாற்றுகிறது. மேலும் கீழுமாய் புரையோடியிருக்கும் ஊழலுக்கு நடுவிலே, நெஞ்சுரத்தோடு நேர்மையைக் கடைப்பிடிக்கும் மிகச்சிலருக்கு... நம்பிக்கையை விடாதீர்கள். நாளை நமதே" என்று பதிவிட்டுள்ளார்.

தேர்வாணைய மோசடி தொடர்பாக பல்வேறு தலைவர்கள் கருத்து கூறிவரும் நிலையில், அரசு அதிகாரத்தின் மேல் மட்டம் முதல் கடைநிலை ஊழியர்கள் ஊழல் பரவியிருப்பதாக கமல் குற்றஞ்சாட்டியிருப்பது முதலமைச்சருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: கடலூரைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details