சென்னை: இலங்கை அரசால் கொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தூண் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்நாட்டு அரசின் இந்த செயலுக்கு திமுக, அதிமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் தகர்ப்பு - கொதித்தெழுந்த தலைவர்கள்!