இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை அறிவிக்கப்பட உள்ளது .
மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - வேட்பாளர் பட்டியல்
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிட உள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம்
இந்த வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது எனவும், தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவிக்க உள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.