தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியலில் ராஜபார்வையிடும் கமல்ஹாசன்..! - மக்கள் நிதி மய்யம்

சென்னை: நடக்க இருக்கின்ற நான்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை அட்டவணையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

மக்கள் நிதி மய்யம்

By

Published : Apr 21, 2019, 8:01 PM IST

தமிழ்நாட்டில் காலியாக உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் செய்ய இருக்கும் தனது தேர்தல் பரப்புரை அட்டவணையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மே மாதம் மூன்றாம் தேதி ஒட்டப்பிடாரத்தில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி சூலூரில் தனது தேர்தல் பரப்புரையை முடிக்கவுள்ளார்.

கமல்ஹாசன் மேற்கொள்ள இருக்கும் பரப்புரை விவரங்களின் அட்டவணை:

தேதி (மே மாதம்) தொகுதி
3, 4, 14 ஒட்டப்பிடாரம்
5, 6, 15 திருப்பரங்குன்றம்
10, 11, 17 சூலூர்
12, 13, 16 அரவக்குறிச்சி

ABOUT THE AUTHOR

...view details