தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மநீம 6-ம் ஆண்டு விழா: வீடுகளில் கட்சிக்கொடியேற்ற கமல் வேண்டுகோள் - நாளை மநீம 6ம் ஆண்டு விழா

மக்கள் நீதி மய்யத்தின் 6-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தொண்டர்கள் தங்கள் வீடுகளில் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மநீம கமல்ஹாசன்
மநீம கமல்ஹாசன்

By

Published : Feb 20, 2023, 5:45 PM IST

சென்னை:நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி, மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். மேலும் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கட்சித் தொடங்கியதில் இருந்து சுமார் 4 தேர்தல்களை மக்கள் நீதி மய்யம் சந்தித்துள்ளது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஓரளவுக்கு வாக்குகளை பெற்று கட்சியை நிலைநிறுத்தினார், கமல்ஹாசன். ஆனால், அதன்பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்தது. இதனால் முக்கிய நிர்வாகிகள், கட்சியில் இருந்து விலகினர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் நாளை (பிப்.21) 6-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதுகுறித்து கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் 6-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக, கட்சி வளர்ச்சிப் பணியாற்ற கிராமங்களை நோக்கி நாம் செல்ல வேண்டும். கட்சிக் கொடியை நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் ஏற்ற வேண்டும். அழகான வெண் மேக கூட்டங்களைப் போல, கட்சிக்கொடி தமிழ்நாடு முழுவதும் பறக்க வழி வகுக்க வேண்டும்.

மாற்றுக்கட்சியினர் கொடியை விட, அதிகமான இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சிக் கொடியை பறக்கவிட வேண்டும். தொண்டர்கள் தங்கள் வீடுகளில் கொடியேற்றி, ஆண்டு விழாவை சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அசாதுதீன் ஓவைசியின் டெல்லி வீட்டில் மர்ம நபர்கள் கல்வீச்சு!

ABOUT THE AUTHOR

...view details