தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சந்திரமுகி 2' படத்திற்கு 2 மாதங்கள் தூங்காமல் உழைத்த கீரவாணி - வெளியான பட அப்டேட்! - expectations among the fans

'சந்திரமுகி 2' படத்தின் அப்டேட் குறித்து ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி, அப்படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

'சந்திரமுகி 2' படத்திற்கு 2 மாதம் தூங்காமல் உழைத்த கீரவாணி - டுவிட்டர் அப்டேட்!
'சந்திரமுகி 2' படத்திற்கு 2 மாதம் தூங்காமல் உழைத்த கீரவாணி - டுவிட்டர் அப்டேட்!

By

Published : Jul 25, 2023, 6:08 PM IST

சென்னை:‘சந்திரமுகி 2’ படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்ட இரண்டு மாதங்கள் தூக்கமில்லாமல் பணியாற்றியிருப்பதாக இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் முதன்மையான வேடத்தில் நடித்துள்ள படம் ‘சந்திரமுகி 2’.

இந்த தமிழ் படத்தின் முதல் பாகம் 2005ஆம் ஆண்டு வெளி வந்தது. அந்தப் படம் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியானது. இதில் நடிகர் பிரபு, வடிவேலு, நடிகை ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி ஒரு ஆண்டு காலம் திரை அரங்குகளில் ஓடி சாதனைப் படைத்தது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் பி.வாசு தனது 65-வது படமாக ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி.எம்.கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தைப் பிரமாண்டமான பொருட்செலவில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து உள்ளது.

இந்த நிலையில் 'சந்திரமுகி 2' படத்திற்கு, அப்படத்தின் இசையமைப்பாளரான 'ஆஸ்கார் நாயகன்' எம். எம். கீரவாணி இரண்டு மாதங்கள் தூங்காமல் கடினமாக உழைத்து பின்னணி இசையமைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு பின்னணி இசையமைத்த அனுபவம் குறித்து இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி தன் ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில்,''லைகா புரொடக்ஷன்ஸின் சந்திரமுகி 2' பார்த்தேன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள், மரண பயத்தால் தூக்கம் இல்லாமல் இரவுகளை கழிக்கின்றனர். அப்படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்ட நான் இரண்டு மாதங்கள் தூக்கமில்லாமல் பணியாற்றியிருக்கிறேன்.

குரு கிரண் மற்றும் என்னுடைய நண்பர் வித்யாசாகர் ஆகியோர் எனக்கு வாழ்த்துகள் தெரிவிக்கவேண்டும்..!'' என பதிவிட்டிருக்கிறார். இசையமைப்பாளர்கள் குரு கிரண் மற்றும் வித்யாசாகர் ஆகியோர் 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தின் கன்னடம் மற்றும் தமிழ்ப் பதிப்பிற்கு இசையமைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருதினை வென்ற பிறகு இந்தியத் திரை உலகமே திரும்பிப் பார்க்கும் இசையமைப்பாளராக மாறியுள்ளார், எம். எம். கீரவாணி. இந்நிலையில் இவர் லைகாவின் 'சந்திரமுகி 2' படத்தின் பின்னணியிசை குறித்து ட்வீட் செய்திருப்பதால் திரை உலகினரிடையே இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: ஓய்வுக்காக வெளிநாடு பறந்த நடிகர் விஜய் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details