காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல் காந்தியின் 52ஆவது பிறந்தநாள் விழா இன்று (ஜூன் 19) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித்தலைவர்கள் உள்பட பலதரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.