தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவ உபகரணங்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ! - கரோனா தொற்று

ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்
எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்

By

Published : Jun 8, 2021, 6:17 PM IST

சென்னை: அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில், 55 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் கன்சன்ரேட்டஸ்களும், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பேட்டரி கார்களும் வழங்கப்பட்டன.

கரோனா தொற்றினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க உதவிடும் வகையில், ரூபாய் 50 லட்சம் மதிப்பில் பேட்டரி கார்களும், ரூபாய் 55 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் கன்சன்ரேட்டஸ்களும், சென்னை காமராஜர் துறைமுகத்தில் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்

இதனை, சென்னை காமராஜ் துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பாலிவால், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐடி மூர்த்தி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: வங்கித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 28 கடைசி தேதி: ஐபிபிஎஸ் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details