தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வில்சனை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்! - வில்சன் கொலை வழக்கு

சென்னை: களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளர் வில்சன் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யவேண்டும் என குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்
செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்

By

Published : Jan 13, 2020, 3:50 PM IST

களியக்காவிளை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை சம்பவம் தொடர்பாக குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான, குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து, அவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் சிலரை கைது செய்துள்ளதாக சொல்கிறார்கள். அதுபோதாது, சரியான குற்றவாளிகளை கண்டுபிடித்து என்கவுண்டர் செய்ய வேண்டும்.
கேரள எல்லையான களியக்காவிளைப் பகுதியில் பணி செய்த வில்சன் கொலை செய்யப்பட்டது, திட்டமிட்ட ஒரு நிகழ்வு போல தெரிகிறது என்றார்.

மேலும், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ள அரசுக்கு நன்றி கூறுகிறேன். எத்தனை கோடி கொடுத்தாலும் உயிரை திரும்ப பெறமுடியாது.

செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்
வில்சன் மூத்த மகள் பட்ட மேற்படிப்பு படித்துள்ளார், அவருக்கு தகுந்த வேலை தரவேண்டும். அவரது இளைய மகள் மாற்றுத் திறனாளி அவருக்குத் தேவையான வசதிகளையும் அரசு செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details