சென்னை:சட்டப்பேரவையில் இன்று (செப்.9) மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் ரூபாய் 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரூபாய் 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக ரூபாயாக உயர்த்துவதற்கான சட்டமசோதா வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.