சென்னை:மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப்.29) சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் முத்துராஜா, கடந்த அதிமுக ஆட்சியில் மற்றும் தற்போதைய திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
அப்போது, “மருந்து முதல் மருத்துவ ஊழியர்களின் பணி நியமனம் வரை அனைத்திலும் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் காணப்பட்டதாகவும் தற்போதைய திமுக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை காணப்படுகிறது” என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “If You are Bad I am Your Dad (நீ கெட்டவன் எனில் நானும் கெட்டவன்) என்ற வசனம் எங்களது தலைவருக்குப் பொருந்தும்.