இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு தமிழ் இயக்கங்கள், கல்வியாளர்கள் என அனைவரும் மும்மொழித் திட்டத்தைத் திணிக்கும் பாஜக அரசின் தேசிய புதிய கல்விக் கொள்கை 2020ஐ கடுமையாக நாம் எதிர்க்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மும்மொழிக் கொள்கை வேதனை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் முதலமைச்சரின் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.
அதேசமயம், தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சியின் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கு கூடுதலாக அழுத்தம் கொடுக்க வேண்டும். மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020, தமிழ்மொழியை முற்றிலும் புறக்கணித்து சமஸ்கிருதத்தை முன்னிறுத்துவதாக அமைந்துள்ளது. நமது கல்வி, இனம், மொழி பண்பாடு ஆகியவற்றிக்கு கேடுவிளைவிக்க உருவாக்கப்பட்டிருக்கும், தேசிய கல்விக் கொள்கை - 2020ஐ முற்றிலும் எதிர்க்க வேண்டும்.
மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை, இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை, ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்பதை எதிர்காலத்தில் நாம் நிலை நிறுத்த வேண்டும். அந்த ஒருமொழிக் கொள்கையான தமிழை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.