தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவொற்றியூரில் பழுதடைந்த கல்லூரி கட்டடங்கள் - எம்.எல்.ஏ ஆய்வு - திருவொற்றியூர் அரசுக் கல்லூரி

திருவொற்றியூரில் பழுதடைந்த அரசு கலைக் கல்லூரி கட்டடங்களை அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவொற்றியூரில் பழுடடைந்த கல்லூரி கட்டிடங்கள் - எம்.எல்.ஏ ஆய்வு
திருவொற்றியூரில் பழுடடைந்த கல்லூரி கட்டிடங்கள் - எம்.எல்.ஏ ஆய்வு

By

Published : Dec 7, 2021, 10:47 PM IST

சென்னை: திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு பூந்தோட்டத்தொடக்கப் பள்ளி வளாகத்தில் இருந்த கட்டடங்களில் இந்த கல்லூரி தொடங்கப்பட்டது.

தொடர் மழையால் கட்டடங்களில் சேதம்:
இந்த கல்லூரி அமைந்துள்ள கட்டடங்கள் அனைத்தும் 20 ஆண்டுகள் பழமையானவையாகும். இந்நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர்மழையால், கல்லூரி கட்டடங்கள் விரிசலடைந்து மிகவும் சேதமடைந்துள்ளன.

கல்லூரி அலுவலகம், வகுப்பறைகள் அமைந்துள்ள கட்டடம் என அனைத்துக் கட்டடங்களும் மிகுந்த சேதமடைந்துள்ளன.

சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு:

இந்நிலையில் சேதமடைந்த கல்லூரி கட்டடங்களை திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் கல்லூரியின் கட்டட மற்றும் அடிப்படை தரங்கள் குறித்துக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

கல்லூரி மாணவர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர், கல்லூரியின் நிலையைக் கேட்டறிந்து பின்னர் 'விரைவில் கல்லூரியை முழுவதுமாக தயார் செய்து தருவோம்' என உறுதியளித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் ஆய்வு
புதிய கட்டடம் அமைக்கத் திட்டம்:

மேலும் இந்த கல்லூரியை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே ரீட் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டத் திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின்போது திமுக பகுதிச் செயலாளர் தனியரசு, கல்லூரி முதல்வர் அரசு ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:8 மாணவர்கள் மதமாற்றம்? - கிறிஸ்தவப் பள்ளி மீது இந்து அமைப்பினர் தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details