சென்னை:இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்தார்.
சோனியாவுக்கு புத்தகத்தை பரிசாக அளித்தும், ராகுல் காந்திக்கு பொன்னாடை அணிவித்தும் ஸ்டாலின் மரியாதை செய்தார்.
இச்சந்திப்பு தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஸ்டாலின்," காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களையும், முன்னாள் தலைவர் சகோதரர் ராகுல்காந்தியையும் சந்தித்துப் பேசினோம். முத்தமிழறிஞர் கலைஞர் காலந்தொட்டே தொடரும் உறவு இது! நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டியெழுப்ப திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் எனச் இச்சந்திப்பு குறித்து ராகுல் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சோனியாவுக்கு புத்தகம்..ராகுலுக்கு பொன்னாடை..