தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை முதல் தீயா வேலை செய்ய இருக்கும் கமல்ஹாசன் - மக்கள் நீதி மய்யம்

சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

கமல்ஹாசன்

By

Published : Mar 27, 2019, 11:56 PM IST

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு அரசியல் கூட்டணி கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாட்டில்நடைபெற உள்ள நாடாளுமன்றம்மற்றும் சட்டப்பேரவைஇடைத்தேர்தலுக்கான முதல் நாள்பரப்புரைநாளை சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை மாலை 4 மணிக்குசெம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் தொடங்கிசோழிங்கநல்லூர் சந்திப்பு, கண்ணகி நகர், கந்தன்சாவடி,விஜயநகர பேருந்து நிலையம், பனகல் மாளிகை, தி.நகர் பேருந்து நிலையம், செயின்ட் மேரீஸ் சாலை, மாஞ்சோலை ,திருவள்ளுவர் சிலை, அம்பேத்கர் பாலம், பட்டினப்பாக்கம், பீச்லூப் சாலை ஆகிய இடங்களில் தனது பரப்புரையை நிறைவு செய்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details