கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதிவரை இந்தத் தடை உத்தரவு தொடரும்
இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பின் நிலைமை குறித்தும், மக்களின் தேவைகள், மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகள் குறித்து திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.