இன்று பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்குத் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளைப் பதிவுசெய்துள்ளார்.
'எதிர்காலக் கனவுகள் நிறைவேற அன்பும், அக்கறையும் கொண்ட வாழ்த்துகள்' - மு.க. ஸ்டாலின் - மாணவர்களுக்கு ஸ்டாலின் ட்விட்டர் வாழ்த்து
சென்னை: பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்குத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில், 'தமிழ்நாடு, புதுவையில் இன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வாழ்வில் அடுத்தக்கட்ட உயர்வுக்கான தேர்வை நம்பிக்கையுடன் சந்தித்து வெல்லவும், உங்கள் எதிர்காலக் கனவுகள் நிறைவேறவும் அன்பும், அக்கறையும் கொண்ட வாழ்த்துகள்!' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...'நாளைய உலகை கட்டமைக்கும் மாணவர்களே...!' - தெறிக்கவிடும் கனிமொழி
TAGGED:
mk stalin twitter