தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கலைஞானி' கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - ஸ்டாலில் வாழ்த்து! - கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய ஸ்டாலின்

சென்னை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கமல்ஹாசனை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

kamal
kamal

By

Published : Nov 7, 2020, 12:29 PM IST

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவ.07) தனது 66ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன்பு காலை ஏழு மணி முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் குவிந்தனர்.

திறந்த வேனில் வந்த கமல்ஹாசன், தனது ரசிகர்கள், தொண்டர்களை சந்தித்தார். தொண்டர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்று, புத்தகங்கள், மரக்கன்றுகளை பரிசாக அளித்தனர்.

கமலின் பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தார்.

மேலும் இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முத்தமிழறிஞர் கலைஞரால் 'கலைஞானி' என்று போற்றப்பட்டவரும், எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரியவருமான நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! நலமுடனும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details