தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற பாண்டவர் அணி! - mk stalin wishes for nadigar sangam election victory

நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதலமைச்சரிடம் வாழ்த்து
முதலமைச்சரிடம் வாழ்த்து

By

Published : Mar 22, 2022, 1:54 PM IST

சென்னை:2019 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியைச் சேர்ந்த தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக், துணைத் தலைவர் பூச்சி முருகன், மனோபாலா, கோவை சரளா, நடிகை லதா உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், "நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல் வெற்றியோடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறோம்.

சமீபகாலமாக நடிகர் சங்கத் தேர்தல் வரலாற்றை பற்றி முதலமைச்சர் கேட்டறிந்தார். அரசு தரப்பில் என்னென்ன உதவிகள் செய்து தர முடியுமோ அதை செய்து தருவதாக கூறினார். தேர்தல் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பை தந்த அரசுக்கு நன்றி. நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்போம்" என்றார்.

இதையும் படிங்க:கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details