சென்னை:உலகத்தின் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் சென்னையைச் சேர்ந்த 16 வயது வீரர் பிரக்ஞானந்தா உள்பட 16 வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சரிடம் பாராட்டு பெற்றார் செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா! - 16 வயது வீரர் பிரக்ஞானந்தா
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டி தொடரில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
![தமிழ்நாடு முதலமைச்சரிடம் பாராட்டு பெற்றார் செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா! தமிழ்நாடு முதலமைச்சரிடம் பாராட்டு பெற்றார் செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14533856-thumbnail-3x2-chess.jpg)
தமிழ்நாடு முதலமைச்சரிடம் பாராட்டு பெற்றார் செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா!
இதனையடுத்து அந்த இளம் வீரருக்கு பல தரப்பிட்டனரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 22) தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரக்ஞானந்தாவை சந்தித்து அவரது வாழ்க்களை தெரிவித்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நம்பர் 1 செஸ் வீரரை வீழ்த்தி தமிழ்நாடு சிறுவன் அசத்தல்!