தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்ரம் லேண்டரை கண்டறிந்த சென்னை பொறியாளருக்கு ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: விக்ரம் லேண்டரை கண்டறியும் முயற்சியல் நாசாவுக்கு உதவிய சென்னை பொறியாளருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

MK STALIN SUBRAMANIAN,ஸ்டாலின் நாசா சுப்பிரமணியன்
MK STALIN SUBRAMANIAN

By

Published : Dec 3, 2019, 3:14 PM IST

இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, செப்டம்பர் 7ஆம் தேதி விக்ரம் எனும் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க முயன்றது. துரதிஷ்டவசமாக கடைசி நொடியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இஸ்ரோ விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது.

இந்நிலையில், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தையும் அதன் உடைந்த பாகங்களையும் கண்டறிந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதற்கு சென்னையை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற பொறியாளர் உதவிபுரிந்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்

சுப்பிரமணியனின் உதவியைப் பாராட்டி, நன்றி தெரிவித்து நாசா அவருக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் பதவிட்டிருந்த ட்வீட்டில், "விக்ரம் லேண்டரை கண்டறிந்த சென்னை பொறியாளர் சுப்பிரமணியனுக்கு பாராட்டுக்கள். எதிர்காலத்தில் நல்ல நிலமைக்கு வர என்னுடைய வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: தலைவர்கள் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details