தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் முதல் வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் முதன் முதலாக வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டின் முதல் வணிக நீதிமன்றம் -
தமிழ்நாட்டின் முதல் வணிக நீதிமன்றம் -

By

Published : Apr 23, 2022, 9:24 AM IST

Updated : Apr 23, 2022, 10:52 AM IST

சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகபிரிவு கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நாமக்கல், விழுப்புரம் சங்கராபுரம் நீதிமன்றம் கட்டட திறப்பு விழா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்க உள்ளது.
இந்நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா பங்கேற்கிறார்.

தமிழகத்தில் கரோனா தொற்றில் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கியும், சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் தமிழகத்தில் முதல் முறையாக வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை உரை ஆற்றவுள்ளார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் நீதிபதிகளுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, புதிதாக துவங்க உள்ள வணிக நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக
நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க :நெல்லை அருகே பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

Last Updated : Apr 23, 2022, 10:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details