இந்தியா-சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த மாதம் இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தைக் குவித்ததால், போர்ப்பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து இரு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட ராணுவ அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து வீரர்களைத் திரும்ப பெற்றுக்கொள்ள இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
இருந்தபோதிலும், கடந்த 15ஆம் தேதி சீன படையினர் இந்திய ராணுவத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் சீனாவிற்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துவந்தன.