கரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த ரெம்டெசிவிர் மருந்து, தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், போதுமான கையிருப்பு இல்லாததால் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் முன்பு ஆயிரக்கணக்கானோர் இந்த மருந்தை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. சில இடங்கில் இரவு முழுவதும் மகள் காத்துக் கிடக்கும் அவலமும் ஏற்பட்டது.
இச்சூழலில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் அளவை அதிகரிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முன்னதாகக் கடிதம் எழுதினார். முதலமைச்சரின் இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டிற்கு நாளொன்றிற்கு 20 ஆயிரம் என்ற அளவில் இந்த மருந்துகளின் அளவை மத்திய அரசு உயர்த்தியது.