தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்களிக்காத மக்கள் வருத்தப்படும்படி பணி இருக்க வேண்டும் - ஸ்டாலின் - தேர்தல் முடிவு குறித்து ஸ்டாலின் உரை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காத மக்கள், வருத்தப்படும்படி, திமுகவின் பணிகள் இருக்க வேண்டும் எனத் தொண்டர்களிடம் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

urban local election  urban local election 2022  local body election  stalin press meet at arivalayam  stalin press meet  stalin press meet in urban local election  நகர்புற உள்ளாட்சி தேர்தல்  தேர்தல் முடிவுகள்  நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்  தேர்தல் முடிவு குறித்து ஸ்டாலின் உரை  செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்
நகர்புற உள்ளாட்சி தேர்தல்

By

Published : Feb 22, 2022, 8:52 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மகத்தான வெற்றிக்குப் பிறகு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அங்கு குவிந்திருந்த திமுக தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், மேளதாளம் முழங்கியும் ஸ்டாலினுக்குஉற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த ஸ்டாலின், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மகத்தான வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் வந்துள்ளது.

இந்த வெற்றிக்கு காரணம் திமுகவுடன் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான். எத்தனையோ சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் செய்யவிருக்கிறோம். பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதுதான் நமது கழகத்தின் லட்சியம்.

தேர்தல் முடிவு குறித்து ஸ்டாலின் உரை

இந்த வெற்றியை ஆடம்பரமாகக் கொண்டாடாமல், அமைதியாகக் கொண்டாட வேண்டும். மக்களுக்காக நீங்கள் பாடுபட வேண்டும். ஏதாவது தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை வெற்றிபெற்ற பின்னர் உறுதி எடுத்துக்கொண்டோம்.

எங்களுக்கு வாக்களித்த மக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். வாக்களிக்காத மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று வருத்தப்படும்படி பணி இருக்க வேண்டும். அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தை நாம் கைப்பற்றியுள்ளோம்” என்றார்.

இந்நிகழ்வின்போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா, அமைச்சர்கள் சேகர்பாபு, ராஜகண்ணப்பன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், கழகத் தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் த. வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம் இது - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details