தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா? - இந்தி திணிப்பு முயற்சி

சென்னை: மத்திய அரசு அலுவலர்கள் மீதான பாஜக அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

MK STALIN STATEMENT OF BALAMURUGAN
MK STALIN STATEMENT OF BALAMURUGAN

By

Published : Sep 8, 2020, 8:22 AM IST

சென்னையில் ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையராகப் பணியாற்றிவரும் பாலமுருகன் என்பவர் இந்தி திணிப்பு குறித்து மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், "மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள மாபெரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துகிறது.

‘இந்தி தெரியாத எனக்கு, இந்திப் பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பம் இல்லை. இந்திப் பிரிவில் உள்ள மூன்று அலுவலர்களும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால், புரியாமல் கையெழுத்திடும் நிலை உள்ளது' என்று பாலமுருகன் கூறியிருக்கிறார்.

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்கள் உள்ள இந்த இந்திய நாட்டை, ஒற்றைத் தன்மைகொண்டதாக மாற்றத் துடிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் கபட நோக்கம் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா? இந்தியாவை, 'இந்தி-யா’வாக மாற்றுவதற்கு மத்திய அரசு துடிக்கிறதா?

மத்திய பாஜக அரசு ஒட்டுமொத்த இந்தியாவுக்கான மத்திய அரசா? அல்லது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசா?”‘ எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details