இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்ட தபால்துறை தேர்வுகள் இனி அவ்வாறு நடத்தப்படாது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவிக்கிறது. மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் நுழைந்து விடக்கூடாது என்ற எண்ணத்துடன் மத்திய அரசு அலட்சியம் செய்யும் வகையில் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்தியில் தபால்துறைத் தேர்வுகள்; ஸ்டாலின் கண்டனம்! - தபால்துறை தேர்வுகள்
சென்னை: தபால்துறைக்கான போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என்று மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
mk stalin
அதேபோல், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களும் இந்திய அரசுப் பணியில் பணிபுரியத் தகுதியானவர்கள் என்பதை மத்திய அரசு மறந்து விடக்கூடாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பில்லாமல் பல இளைஞர்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தி மொழியில் தேர்வு என்பது இந்தி தெரியாதவர்களின் வேலை வாய்ப்பைக் கெடுக்கும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Last Updated : Jul 13, 2019, 4:24 PM IST