தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’சம்மட்டி அடி எங்களுக்கு இல்லை, அதிமுகவிற்கு மரண அடி’ - ஸ்டாலின் பதிலடி!

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அதிமுகவிற்கு மரண அடி கொடுத்ததாகத் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk-stalin
mk-stalin

By

Published : Dec 11, 2019, 10:56 PM IST

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை உணர்ந்து முறையாகத் தேர்தல் நடத்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்று சி.வி. சண்முகம் தெரிவித்த கருத்துக்கு, ”அதிமுக ஒன்பது மாவட்டங்கள் சரியாக வரையறை செய்யப்பட்டுள்ளது எனக் கூறிவந்த நிலையில் அப்படி இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி, ஒன்பது மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது எனக் கூறியது அவர்களுக்கு கிடைத்த மரண அடி” என்றார்.

மேலும், “மக்களை சந்திக்க திமுக என்றும் ஓடி ஒளிந்துகொள்ளவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என எங்கும் திமுக கோரிக்கை வைக்கவில்லை. மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்

குடியுரிமை சட்ட மசோதாவில் திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு அதை கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார். அதிமுக குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்ததின் மூலம் கொலைகாரன், கொள்ளைக்காரன் ஆட்சியாக இருந்த எடப்பாடி ஆட்சி, தற்போது தமிழர்களுக்கு துரோகம் செய்து, துரோக ஆட்சியாகியுள்ளது” எனக் கடுமையாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: ’உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தக்கோரி திமுக ஐநாவிற்குச் செல்லாமல் இருந்தால் சரி’ - ஜெயக்குமார் கிண்டல்!

ABOUT THE AUTHOR

...view details