2019-20ஆம் நிதி ஆண்டிற்கான முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி(மொத்த உள்நாட்டு உற்பத்தி) ஐந்து விழுக்காடாக குறைந்துள்ளது, என மத்திய புள்ளியியல் துறை அறிவித்துள்ளது.
பாஜக அரசு இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்: ஸ்டாலின் காட்டமான ட்வீட் - இந்திய பொருளாதார செய்திகள்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஐந்து விழுக்காடாக குறைந்துள்ளது என்ற அறிவிப்பையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இன்று மாலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் நாட்டின் பல்வேறு மக்களாலும் தலைவர்களாலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இந்த அறிவிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளதை தெளிவுபடுத்தியுள்ளது. பாஜக அரசு பெருமைபேசி மார்தட்டிக்கொள்வதை நிறுத்திவிட்டு நாட்டின் வளர்ச்சியில் உள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். பாஜக அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, தொழில்துறை வீழ்ச்சி ஆகிய பிரச்னைகளை களைய வேண்டும்”, என குறிப்பிட்டுள்ளார்.