இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசைப் பகைத்துக் கொண்டால், ஆட்சியையும் அதிகாரத்தையும் பலி கேட்பார்களோ என்று பயந்து, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை விட்டுக் கொடுக்காமல் அதிமுக அரசு நெஞ்சுயர்த்தி நிற்க வேண்டும்.
’சிறப்புப் பொருளாதார உதவித் திட்டம்’ என்று அறிவித்து, தனியார்மயத்திற்கு சிவப்புக் கம்பளத்தை அனைத்துத் துறைகளிலும் விரிக்க முயன்றிருக்கும் மத்திய அரசு, ’எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம்’ என்ற வஞ்சக நோக்குடன், மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை, தங்களுடைய அஜெண்டாவுக்குப் பயன்படுத்திக் கொள்வதை, ஏற்றுக்கொள்ள முடியாது.