கோவிட்-19 வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திரையரங்குகள், மால்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமை செயலகத்தில் கடந்த வாரம் முதல் வைரஸ் விழிப்புணர்வு மற்றும் மருந்து தெளித்தல் மேற்கொள்ளப்பட்டது.
மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை
சென்னை: சட்டப்பேரவைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள கோவிட்-19 வைரஸ் பரிசோதனையை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்து கொண்டார்.
MK Stalin screening the Covid 19 virus
இந்நிலையில் தற்போது சட்டப்பேரவை நடந்து வருவதால், சட்டப்பேரவைக்கு வரும் உறுப்பினர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சட்டபேரவை நான்காவது வாயில் வழியாக வரும் உறுப்பினர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு, திமுக உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.