தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தற்போது பெற்றிருப்பது மாபெரும் வெற்றி அல்ல - எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் - mk stalin says its not a mass victory

தற்போது பெற்றிருப்பது மாபெரும் வெற்றி அல்ல என்றும் அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெரும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

mk-stalin-says-in-dmk-mla-meeting-that-its-not-a-mass-victory
'தற்போது பெற்றிருப்பது மாபெரும் வெற்றி அல்ல - எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஸ்டாலின்

By

Published : Jun 21, 2021, 11:20 PM IST

சென்னை:சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், தற்போது பெற்றிருப்பது மாபெரும் வெற்றி அல்ல. அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்கவேண்டும். எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கும், பிரச்னைகளுக்கும் மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிளிக்கவேண்டும்.

பேரவையில் சிறப்பாக செயல்படுவதற்கு உறுப்பினர்கள், துறை வாரியாகவும் தொகுதி வாரியாகவும் தரவுகளை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் பேரவையில் அதிகளவில் கேள்விகளை எழுப்பவேண்டும். அப்போதுதான் நீங்கள் சிறப்பாக செயல்படமுடியும்" என்றார்.

இதையும் படிங்க:'ரீபவரிங்' குறித்து ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி - பூவுலகின் நண்பர்கள்

ABOUT THE AUTHOR

...view details