சென்னை:மழைக்காலத்தில் பேரிடர் மேலாண்மைத்துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இன்று (நவ.2) ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையை மட்டுமில்லாமல் தமிழ்நாட்டையே அதிமுக ஆட்சியில் சீரழித்துவிட்டுச் சென்றுள்ளனர் எனவும்; அதை ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியில் சரிசெய்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மழை, வெள்ளப்பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு அறையில் நடக்கும் மழைக்கால மீட்புப்பணிகள் தொடர்பாக அலுவலர்களிடம் முதலமைச்சர் முன்னதாக கேட்டறிந்தார். உடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடனிருந்து அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.