தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்... ஆனால்' - என்ன சொல்கிறார் ஸ்டாலின்? - dmk mk stalin

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்பதாகவும், திமுக தேர்தலுக்குத் தயாராக இருப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk stalin
mk stalin

By

Published : Dec 6, 2019, 7:59 PM IST

உள்ளாட்சித் தேர்தல் ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, உள்ளாட்சித் தேர்தல் வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மனப்பூர்வமாக வரவேற்பதாகவும், உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவது திமுகவின் நோக்கமல்ல, நியாயமாக நடத்த வேண்டும் என்பதே கோரிக்கை எனவும் தெரிவித்தார்.

ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திடமும், தமிழ்நாடு அரசிடமும் உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், குறிப்பாக தேர்தல் அறிவித்த பின்பு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்குக் காரணம் என்ன?, மாவட்டங்கள் சரியாக ஏன் வரையறை செய்யவில்லை? போன்ற முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதேபோல், தெம்பு இருந்தால் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக நேர்மையாகச் சந்திக்கட்டும் என்று கூறிய அவர், எந்த நேரத்தில் தேர்தல் வைத்தாலும் அதை எதிர்கொள்ள திமுக தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details