தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நகரும் புகைப்படக் கண்காட்சி' : திறந்து வைக்கும் மு.க.ஸ்டாலின்!

'விடுதலைப் போரில் தமிழகம் ' என்ற புகைப்படக் கண்காட்சி மற்றும் கப்பலோட்டிய தமிழன் வஉசியின் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.

'நகரும் புகைப்படக் கண்காட்சி' : திறந்து வைக்கும் மு.க.ஸ்டாலின்!
'நகரும் புகைப்படக் கண்காட்சி' : திறந்து வைக்கும் மு.க.ஸ்டாலின்!

By

Published : Oct 31, 2021, 11:07 PM IST

சென்னை: சென்னையின் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நாளை (நவ.1) காலை 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடுவதையொட்டி புகைப்படக் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் ' விடுதலைப் போரில் தமிழகம் ' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட அரும்பெரும் தலைவர்களின் சிலைகள், தேசத் தலைவர்களின் வரலாற்றுத் தொகுப்புகளின் அரிய புகைப்படங்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. புகைப்படக் கண்காட்சியானது நவம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்ந்து கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்தும் அரசுப் பேருந்தில் நகரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தொடங்கி வைக்கிறார். புகைப்படக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சசிகலா குறித்த கேள்விக்கு செய்தியாளர்களை சந்திக்க மறுத்த எடப்பாடி பழனிச்சாமி

ABOUT THE AUTHOR

...view details