தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் 97 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 8) திறந்துவைத்தார்.
முதலமைச்சர் திறந்துவைத்த கட்டடங்கள்
கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரில் இயல்புநிலை தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பவுடர் தயாரிக்கும் கூடம், தலா 500 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள், தரம் பிரிப்பு மற்றும் சிப்பம் கட்டும் கூடம், பரிவர்த்தனை கூடம், மரச்செக்கு கூடம், கடைகள், சிற்றுண்டி கூடம், அலுவலகக் கட்டடம், உலர்களங்கள், எடை மேடை மற்றும் தொழிலாளர் ஓய்வு அறை முதலான கட்டுமானங்களை உள்ளடக்கி 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தென்னை மதிப்புகூட்டு மையம்.
தருமபுரி மாவட்டம் - பாப்பாரப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் - வேடச்சந்தூர் மற்றும் கவுஞ்சி, தேனி மாவட்டம் - கெங்குவார்பட்டி ஆகிய இடங்களில் ரூ.39.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2000 மெ.டன் குளிர்பதன கிடங்கு, தரம்பிரிப்பு மற்றும் சிப்பம் கட்டும் கூடம், தர நிர்ணயம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அறை, 1000 மெ.டன் மற்றும் 500 மெ.டன் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இயந்திரங்களுடன் கூடிய முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ரூ.20.20 கோடி மதிப்பீட்டில் 2.50 லட்சம் மலர் தண்டுகளுக்கான குளிர்பதன கிடங்கு, ஏல மையம், தரம் பிரிப்பு கூடம், வணிகர் கூடம், கடைகள், கூட்ட அரங்கம், பயிற்சி அரங்கம், விநியோகக்கூடம், 2000 மெ.டன் சேமிப்பு கிடங்கு முதலான கட்டுமான பணிகளை மலர் வளர்க்கும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காகவும் ஏற்றுமதியினை ஊக்கப்படுத்தும் வகையிலும் மலர்களுக்கான பன்னாட்டு ஏலமையம்.