ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில வளர்ச்சிக்கு திட்டங்கள்: தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தல் - mk stalin meeting with planning and development group

மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

mk stalin meeting
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Jul 26, 2021, 7:03 PM IST

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.

இதில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, மாநில வளர்ச்சி கொள்கைக்குழு, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள்

திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முக்கிய திட்டங்களான, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையால் மேற்கொள்ளப்படும் வேளாண், பொருளாதாரக் கணக்கெடுப்புகள் குறித்தும், பயிர் காப்பீடு திட்டத்தில், பயிர் அறுவடைகளின் சராசரி கணக்கெடுப்புப் பற்றிய புள்ளிவிவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

in article image
ஆய்வுக் கூட்டம்

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், விவசாயிகள் நலன் காக்கவும், தொழில் வளர்ச்சி சிறக்கும் திட்டங்களை வகுத்து, அவற்றின் செயல்பாட்டினை கண்காணிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

தொலைநோக்குடன் பார்வையுடன் செயல்பாடு

அரசின் நிதி ஒதுக்கீடுகள் பெரும்பான்மையான மக்களுக்கு சென்றடையும் வகையில் திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்த வேண்டும். திட்டங்களை வகுக்கையில் பல்வேறு துறை வல்லுநர்களையும், செயற்பாட்டாளர்களையும் கலந்தாலோசித்து, அவர்கள் கருத்தினை பெற்று திட்டங்களை இறுதி செய்வது, மேலும் சிறப்பான பயன்களை அளிக்கும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மாநிலத்திற்கான பிரத்யேகமாக நிகழ்தரவு (Real Time Data) ஒன்றினை நிறுவுமாறும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான தொலைநோக்குத் திட்டங்கள் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு ஐந்தாண்டுகளில் ஆண்டுதோறும் ஏற்படும் நிகழ் மாற்றங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:Phone surveillance: நாட்டிலேயே முதல்முறையாக விசாரணை ஆணையத்தை உருவாக்கிய மம்தா

ABOUT THE AUTHOR

...view details