திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”இதுவரையில் ஏறத்தாழ ஏழு லட்சம் பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ள நிலையில், நமது நாடு ஒரு கடுமையான பெருந்தொற்றுப் பரவலை எதிர்கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் ஏற்படாத இந்தப் பிரச்னையால், சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினர்தான் மற்றவர்களை விடவும் அதிகமான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
'மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்க' - மோடிக்கு ஸ்டாலின் கடிதம் - mk stalin
13:17 July 08
சென்னை: மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்துசெய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இத்தகையச் சூழலில், அனைத்துக் குடிமக்களின் நலன் காக்கவும், அவை அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகவும், நியாயமாகவும் கிடைப்பதை உறுதிசெய்யவும் மத்திய அரசு எடுக்கும் சில முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அதன்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்க்கும் முடிவினைத் திரும்பப் பெற வேண்டும், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்தல், மருத்துவப் படிப்புகள் இளங்கலை, முதுகலை, பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை (நீட்) ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வழிவகுக்கச் செய்திட வேண்டும்.
மேலும், தொற்று நோயினால் நாடு இத்தகைய ஆபத்தான சூழலில் இருக்கும் நிலையில், ஏற்றத்தாழ்வுகள் இன்னும் அதிகரிக்கத்தான் போகின்றன. இந்நிலையில், ஏற்கனவே நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகள் நீடிப்பதற்கும் அல்லது அதிகரிப்பதற்குமான கொள்கை முடிவுகளைத் தொடர்வது, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். இவற்றைக் கவனத்தில்கொண்டு இந்தியாவில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'மருத்துவக் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை அமல்படுத்துக'