தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடைத் துறையில் நெருக்கடி..ECLGS திட்டத்தை உடனடியாக அறிவிக்கக் கோரிக்கை - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் - MK Stalin letter to Modi On for immediate

ஆடைத் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை போக்க, சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஆடைத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ECLGS திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
ஆடைத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ECLGS திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

By

Published : Oct 20, 2022, 9:11 AM IST

Updated : Oct 20, 2022, 9:17 AM IST

சென்னை: இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.19) எழுதிய கடிதத்தில், “கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மேற்கில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல காரணிகளால் ஆடை ஏற்றுமதி துறை, கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மாதந்தோறும் வளர்ச்சி விகிதம் இப்போது கூர்மையான சரிவைக் காட்டுகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சந்தைகளை பூர்த்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை ஏற்றுமதி தொகுப்புகளில் ஒன்றான திருப்பூர் அலகில், 95% குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, கோடைக் காலத்திற்கான கொள்முதல் ஆணைகள் தற்போது சுமார் 40% குறைந்துள்ளன.

குறைந்த தேவை காரணமாக, அடுத்தடுத்த மாதங்களில் ஏற்றுமதி பிரிவுகளும், அவற்றின் குறு, சிறு நிறுவன விநியோகதாரர்களும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். தொழிலாளர் வர்க்கத்தில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ள கிராமப்புறப் பெண்கள் வேலைவாய்ப்பு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வர, ஆடைத் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) உடனடியாக அறிவித்து, புதிய திட்டத்தின் கீழ் 20% கூடுதல் பிணையமற்ற கடன் வழங்கப்படலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் ரூ.1,050 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் - ஸ்டாலின்

Last Updated : Oct 20, 2022, 9:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details