தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகதாது அணை திட்டம்: கர்நாடக முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! - கர்நாடக முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

By

Published : Jul 4, 2021, 3:57 PM IST

Updated : Jul 4, 2021, 5:40 PM IST

15:53 July 04

கர்நாடக மாநிலம் மேகேதாட்டில் அணைக்கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அம்மாநில முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை:  தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்னர், டெல்லி சென்ற  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பிரதமரைச் சந்தித்து, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிட, கர்நாடக அரசு மேகேதாட்டில் அணைகட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார்.  

இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு, மாநிலத்தின் குடிநீர் தேவைக்காக, மேகேதாட்டில் அணை கட்ட நிதி ஒதுக்கி அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவவேற்றியது.

இந்நிலையில், நேற்று (ஜூலை 3) கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தமிழ்நாடு அரசு தவிர்க்க வேண்டும், அணை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.  

அதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், மேகேதாட்டு அணை திட்டத்தை   கைவிட வேண்டும்.  

குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாக கூறும் கர்நாடக அரசின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு  பாதிப்பை ஏற்படுத்தாது என்ற கருத்தையும் ஏற்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.  

இதையும் படிங்க: மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டியுள்ளது

Last Updated : Jul 4, 2021, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details