தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு மருத்துவ முகாமை இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின் - வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், பருவகால நோய்களை குணப்படுத்த மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.12) தொடங்கி வைக்கிறார்.

சிறப்பு மருத்துவ முகாமினை இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
சிறப்பு மருத்துவ முகாமினை இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

By

Published : Nov 12, 2021, 7:02 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை புரட்டி போட்ட நிலையில், பருவகால நோய்கள் அதிகரித்து உள்ளது. குறிப்பாக காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட நோய்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தேனாம்பேட்டை மண்டலம் 122 வார்டுக்குட்பட்ட பகுதியில் மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெறலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சேர்ந்து உழைப்போம் - முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details