தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டுமனைகள் வாங்குவோர் வசதிக்காக புதிய செயலி - முதலமைச்சர் தொடங்கி வைப்பு - வீட்டுமனைகள் வாங்குவோர் வசதிக்காக புதிய செயலி

வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குவதற்கான மென்பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 18, 2023, 7:23 PM IST

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் பணிகள் மற்றும் மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருட்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.01.2023) தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் செயல்படும் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்ககத்தின் (Directorate of Survey and Topography TamilNadu) தமிழ்நிலம் வலைதளத்தில் (https://tamilnilam.tn.gov.in) நிறுவப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கு உண்டான பட்டா மாறுதல் (Patta) செய்யும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் மற்றும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைப் பிரிவில் பொதுமக்கள், மனைகள் கிரயம் பெறும்போது, ஒவ்வொரு மனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய, தனித்தனியாக மனுக்கள் பெறப்படும் சூழல் இருந்து வருகிறது. இவ்வாறு ஒரே மனைபிரிவில் (layout) உள்ள வீட்டு மனைகளை நிலஅளவை செய்து உட்பிரிவு செய்வதற்காக நில அளவர் பல்வேறு தினங்களில் தனித்தனியே செல்லவேண்டிய சூழலும் இருக்கிறது.

பட்டா வழங்குவதில் சிக்கல் குறைய வாய்ப்பு:தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் 1.50 லட்சம் உட்பிரிவு மனுக்கள் பெறப்படுகின்றன. அதில், பெரும்பாலான மனுக்கள் மனைப் பிரிவைச் சார்ந்தவை. இதனால், உட்பிரிவு பட்டா மாறுதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த இப்புதிய மென்பொருள் மூலமாக மனைப்பிரிவுகளை, ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து மனைப்பிரிவின் உரிமையாளர்களின் பெயரில் பதிவு செய்யப்படுவதால், பின்னாளில் மனைகளை உட்பிரிவு செய்யக்கோரி தனித்தனியாக மனுக்கள் வரப்பெறுவது தவிர்க்கப்படும். மேலும், மனைப்பிரிவுகள் சார்ந்த உட்பிரிவு மனுக்களின் எண்ணிக்கை குறைந்து, மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கும் சூழல் ஏற்படும்.

அலைச்சல் குறைய வாய்ப்பு:இப்புதிய மென்பொருள் மூலமாக, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் உள்ள அனைத்து மனைகளும் உட்பிரிவு செய்யப்பட்டு, மனைப்பிரிவின் உரிமையாளர் பெயரிலேயே பட்டா வழங்கப்படும். மேலும், தனித்தனியே பொதுமக்கள் அம்மனைப்பிரிவில் ஒரு மனையை வாங்கும்போது, பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தானியங்கி பட்டா மாறுதல் முறையில் கிரயம் பெற்ற பொதுமக்களின் பெயரில் மாற்றம் செய்யப்படும். பட்டா மாற்றத்திற்காக பொதுமக்கள், மீண்டும் தனியே விண்ணப்பிக்கவோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லாமல், அவர்களது இன்னல்கள் தவிர்க்கப்படும்.

நில மோசடிகள் குறையலாம்: மனைப்பிரிவில் உள்ள பொதுப்பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களான சாலைகள், பூங்கா போன்ற நிலங்கள் தனியே உட்பிரிவு செய்யப்பட்டு, அந்த இடம் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பெயரில் உடனுக்குடன் நில ஆவணங்களில் பதிவு செய்யப்படும். இதனால், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து தடுக்க இயலும்.

மேலும், இதுபோன்ற பொதுப்பயன்பாட்டிற்கான நிலங்களை மோசடியாக விற்பனை செய்யும் நிகழ்வுகளும் தவிர்க்கப்படும். மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள் வருவாய் கிராமங்கள் நகரமயமாதலுக்குப் பின்னர், நகர்ப்புற தன்மையை அடைவதைத் தொடர்ந்து, நகரளவைப் பணி மேற்கொள்ளப்படும்.

நகரளவைப் பணியின்போது, வருவாய் ஆவணங்கள் நகர நில அளவை பதிவேடுகளாக மாற்றம் செய்யப்பட்டு, புல எண்கள் வார்டு மற்றும் பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, புதிய நகர நில அளவை எண்கள் உருவாக்கப்படுகின்றன. அதே நேரத்தில், மேற்படி புலங்களின் உடைமைதாரர்களின் உரிமை ஆவணங்கள் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் புலங்களின் உரிமை குறித்த நில ஆவணங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

இப்பணியானது 2007-ல் ஆரம்பிக்கப்பட்டு மாநிலத்திலுள்ள பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகளில் 15 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி மிகுந்த காலதாமதம் ஆவதன் காரணமாக குடிமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட நில ஆவணங்களை பெறுவதில் சிரமத்தை அளித்து வந்த நிலையில், மேற்படி வருவாய் பின்தொடர் பணி, நகர நிலவரித் திட்டப் பணியினை குறைந்த காலத்திற்குள் முடித்திட ஏதுவாக தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre) வாயிலாக தயாரிக்கப்பட்ட புதிய மென்பொருளை (New Software Application) முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: "ரெட் ஜெயன்ட் மூவிஸ்" முதலமைச்சரின் பினாமி நிறுவனம்: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details