இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து, சட்டப்பேரவை ஜனநாயகத்தை சென்னை உயர் நீதிமன்றம் காப்பாற்றி இருக்கிறது.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும், மக்களை வெகுவாகப் பாதிக்கும் பிரச்னைகளையும், சட்டப்பேரவையில் எழுப்பும் உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்றத் தவறி விட்டாலும், சென்னை உயர் நீதிமன்றம் அந்த உரிமையை சட்டப்பூர்வமாகப் பாதுகாத்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது.