குடியுரிமைச் சட்டத்துக்கு (#CAA2019) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில், வரும் 23ஆம் தேதி சென்னையில் திமுக தலைமையில் பேரணி நடைபெறவுள்ளது.
இந்தப் பேரணியில் பங்கேற்க பல்வேறு கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தற்போது அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.