தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தீரன் சின்னமலையின் வீரத்தை நினைவுகூருவோம்' - தீரன் சின்னமலை பிறந்தநாள் குறித்து மு.க.ஸ்டாலினின் முகநூல் பதிவு

சென்னை: ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக எவருக்கும் அஞ்சாமல் படை நடத்திய வீரன் தியாகி சின்னமலையின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

stalin
stalin

By

Published : Apr 17, 2020, 1:22 PM IST

விடுதலைப் போராட்ட வீரர், தீரன் சின்னமலையின் 265ஆவது பிறந்தநாள் இன்று ஏப்ரல் (17ஆம்) திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு மு.க. ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

இந்நிலையில், தீரன் சின்னமலை பிறந்தநாள் குறித்து மு.க. ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு:

"ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக யாருக்கும் எவருக்கும் அஞ்சாமல் படை நடத்திய வீரதீரன் தியாகி சின்னமலை.

தனது அதிகாரம் நிலைத்தால் போதும் என எண்ணாமல் நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி இன்னுயிர் ஈந்த மாவீரன்!

தூக்குக் கயிற்றை முத்தமிடும்போதும் லட்சியம் மாறாதவர்.

அவர் பேரைச் சொல்லி வீரம் பெறுவோம்! அவர் நினைவைப் போற்றி கொள்கை வெல்வோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

தீரன் சின்னமலை பிறந்தநாள் குறித்து மு.க. ஸ்டாலினின் பதிவு

இதையும் பார்க்க:'மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறலாம்; விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி' - ஆர்பிஐ ஆளுநர்

ABOUT THE AUTHOR

...view details