சென்னை:வேலூர் மாநகராட்சியில் 107 நபர்கள், சேலம் மண்டலத்தில் 91 நபர்கள், சேலம் மாநகராட்சியில் 220 நபர்கள், திருப்பூர் மண்டலத்தில் 225 நபர்கள், திருப்பூர் மாநகராட்சியில் 133 நபர்கள், செங்கல்பட்டு மண்டலத்தில் 4 நபர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சியில் 414 நபர்கள், ஈரோடு மாநகராட்சியில் 113 நபர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 260 நபர்கள் என மொத்தம் 2,608 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.
சென்னையில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப் பகுதிகளில் தொடர்ந்து பணி செய்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையானது இன்று (டிச.12) வழங்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் டிசம்பர் 4ஆம் தேதி புயல் பாதிப்பால் சென்னை மாநகரத்தில் பல பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு தற்போது, சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இதற்குக் காரணமான தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களின் சேவை மகத்தானது. தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருந்தாலும், இரவு பகல் பாராமல் சென்னையை மீட்க சுமார் 16,000 பணியாளர்களும், பிற மாவட்டங்களிலிருந்து வந்த 2,000க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களும் தொடர்ந்து இப்பணிகள் செய்தனர். மேலும், கடந்த 5 நாட்களில் 32,000 மெட்ரீக் டன் குப்பைகளும் அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ளத் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.