தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் ஆலோசனை - chennai district news

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் .

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

By

Published : May 4, 2021, 12:24 PM IST

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்து வருகிறது. நேற்று (மே.03) மாநிலத்தில் கரோனா தொற்றல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (மே.03) தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் கரோனா தடுப்பு, மருத்துவச் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எவ்விதமான தொய்வுமின்றி முழு முனைப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை (மே.05) முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details