தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா தொற்று நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை அவசியம்' - ஸ்டாலின் - MK stalin post in FB page questioning Corona status

சென்னையில் திடீரென கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Jun 17, 2020, 3:59 PM IST

திமுக தலைவர் ஸ்டாலின் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், 'முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனாவால் மறைவெய்தி இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தலைமைச் செயலகம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

பரிசோதனை, புதிய கரோனா நோய்த்தொற்று குறித்த விழுக்காடு வாரியான விவரங்கள் ஏதும் இல்லாத நிலையில் சென்னையில் "நோய்த் தொற்று வளைவில்" (Epi curve) அசாதாரணமாக திடீரென்று "நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று தொற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் பிரதீப் கவுர் கூறியிருப்பது மிகவும் உன்னிப்புடன் கவனிக்கத்தக்கது.

இதற்கு உரிய விளக்கத்தை அளிப்பதோடு, கரோனா நோய்த்தொற்று நடவடிக்கையில் அரசு மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்பட கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முழுப் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சுயப் பாதுகாப்பிற்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களும் வழங்கிட வேண்டும் எனவும், இனி ஒரு முன்களப்பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது' எனவும் ஸ்டாலின் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் - இணையவழி கல்விக்கு ஸ்டாலின் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details