தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமெரிக்க கரோனா தடுப்புக் குழுவில் தமிழ் வம்சாவளி பெண் - வாழ்த்திய ஸ்டாலின்

சென்னை: அமெரிக்காவில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் தேசியப் பணிக்குழுவின் இடம்பெற்றிருக்கும் தமிழ் வம்சாவளி பெண் மருத்துவருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

celine gounder MK Stalin
celine gounder MK Stalin

By

Published : Nov 10, 2020, 5:15 PM IST

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் அமைத்துள்ள வழிகாட்டுதல் குழுவில் இந்திய வம்சாவளியான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் செலின் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிக்குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு வாழ்த்து தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், “அமெரிக்காவில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் தேசியப் பணிக்குழுவின் உறுப்பினராக தமிழ் வம்சாவளி பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அதி முக்கியமான பணிக்குழுவில் செலின் இடம்பெற்ற செய்தி கேட்கவே இனிமையாக இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செலின் தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் 1998-2012 காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்ஐவி நோய்கள் தொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:'நினைத்ததை நடத்தி முடிப்பவள் அவள்' - கமலா ஹாரிஸின் 'சித்தி' சரளா கோபாலன் பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details