சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அப்பாவுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பெரும்பாமனையுடன் ஆட்சி அமைக்க வைத்த தமிழக மக்களுக்கு என் நன்றிகள்!
சபாநாயகர் அப்பாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து! - சபாநாயகர் அப்பாவு
சுதந்திரத்தின் அடையாளமாக நீங்கள் இன்று பேரவையில் அமர்ந்துள்ளீர்கள்; தூய்மையின் அடையாளமாக வெள்ளை கதர் உடையுடன் அமர்ந்து இருக்கிறீர்கள்.
சட்டப்பேரவை தலைவர் இந்த இருக்கையில் அமர்ந்து இருப்பதை பார்க்கும்போது என் நெஞ்சம் பூரிப்பு அடைந்துள்ளது. ஊடக விவாதங்களில் கருத்தோடும், சுவையோடும் பேசும் உங்களை கவனிப்பவரில் நானும் ஒருவன்.
சுதந்திரத்தின் அடையாளமாக நீங்கள் இன்று பேரவையில் அமர்ந்துள்ளீர்கள்; தூய்மையின் அடையாளமாக வெள்ளை கதர் உடையுடன் அமர்ந்து இருக்கிறீர்கள். இந்த பேரவையை ஜனநாயக மாண்புடன், மரபு வழி நின்று நடத்துவீர்கள் என்பதில் யாருக்கும் எள் அளவும் சந்தேகமில்லை.
தங்கள் தலைமையிலான இந்த அவையில் நாங்கள் செயல்படுவதை பொற்காலமாக கருதுகிறோம்; ஆசிரியராக இருந்த நீங்கள் இன்று 234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள அவையின் தலைவராக பதவியேற்று உள்ளீர்கள். நீங்கள் அவை தலைவர் என்பதால் கழக பணி செய்ய முடியாமல் போகிறதே என்ற வருத்தம் இருந்தாலும் கூட இந்த இடத்திற்கு நீங்கள் தான் பொருத்தமானவர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், பேரவையின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கு. பிச்சாண்டியை மனதார வாழ்த்துகிறேன்; அனைவரிடமும் பாசத்துடன் பழகக்கூடியவர் என குறிப்பிட்டுள்ளார்.